இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்ற.. டென்மார்க் ராணிக்கு கொரோனா பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கடந்த 8-ம் தேதி உடல்நலக்குறைவால்  உயிரிழந்தார். மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கு கடந்த 19-ந் தேதி லண்டனில் நடைபெற்றது.

இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கரெட் (வயது 82) நேரில் கலந்து கொண்டு, ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதியானது. இதனையடுத்து அவரது அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மீண்டு வந்தார். அவர் 3 தவணை தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ள நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Denmark queen margrethe affected covid positive


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->