யாகி புயல் பாதிப்பால் வியட்நாமில் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்வு! - Seithipunal
Seithipunal


149 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி யாகி புயல். 7 பேர் உயிரழந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன.

பிலிப்பைன்சில் உருவான இந்த சூறாவளி யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை தாக்கியுள்ளது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து இந்த சூறாவளி யாகி புயல் வீசி உள்ளது.

தலைநகர் ஹனோயில் மணிக்கு 149 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி யாகி புயல் கரையை கடந்ததுள்ளது. மேலும், இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான சூறாவளி புயலாக வியட்நாமில் கருதப்படும் இந்த யாகி புயல், அந்த நாட்டை முழுவதுமாக தாக்கி சேதமடைய வைத்துள்ளது.

இந்நிலையில், வியட்நாமின் வடக்குப் பகுதி இந்த சூறாவளி யாகி புயல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக  மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர் கனமழை, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவுகளில் சிக்கி 219 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன் வகையில், நேற்று, வெள்ள பாதிப்பால் நீரில் மூழ்கிய கிராமங்களில் இருந்து  மேலும் 7 பேர் உயிரழந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து, இந்த யாகி புயல் பாதிப்பால் வியட்நாமில் மட்டும்  உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 226-ஆக அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Death toll from Typhoon Yagi rises to 226 in Vietnam


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->