காசா மீது தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: இன்று 06 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு: 58 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..! - Seithipunal
Seithipunal


இன்று காசாவில் தண்ணீர் பிடிக்கும் இடத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 06 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், நிவாரண மையங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 28 பேர் உட்பட 59 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 07-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில், இஸ்ரேலை சேர்ந்த 1,200 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இஸ்ரேல் ராணுவம், விமானப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், அதனை கடைபிடிக்கவில்லை என இரு தரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டின.

இந்நிலையில், பாலஸ்தீனத்தின் காசாவில் கடந்த 21 மாதமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனையடுத்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது.

இதனால், இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா முயன்று வருகின்ற நிலையில், போரை நிறுத்துவதற்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நிறுத்தப்படும் என்றும், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஆனால், இதனை ஹமாஸ் அமைப்பினர் ஏற்கவில்லை. தொடர்ந்து தங்கள் பிடியில் உள்ள எஞ்சிய பிணைக்கைதிகளை விடுவிக்க தயாராக உள்ளதாக மட்டும் கூறியுள்ளதால்,போர் நிறுத்தம் ஏற்படுவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Death toll exceeds 58 thousand in Israeli attack on Gaza


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->