ரகசா புயல் எதிரொலி: 20 லட்சம் பேர் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றம்! சீனாவில் 5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு!
Cyclone Rakshasa 2 million people shifted to shelters Power cut in 5 lakh homes in China
தென் சீனக் கடலில் உருவான ரகசா புயல், முதலில் தைவானை தாக்கியதும் பின்னர் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை கடுமையாகப் பாதித்துள்ளது.
மணிக்கு 265 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
மணிக்கு 200 முதல் 230 கிமீ வேகத்தில் காற்று வீசியதால், மாகாணம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது.
20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்தப்பட்டனர்.கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
புயலின் தாக்குதலால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், 5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.
தொடர்ந்து பெய்த கனமழை பல நகரங்களை வெள்ளக் காடாக மாற்றியது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தற்போது இந்த ரகசா புயல் தனது பாதையை மாற்றி வியட்நாம் நோக்கி நகர்ந்து வருகிறது.அதிகாரிகள், புயல் தாக்கம் தொடரும் பகுதிகளில் பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Cyclone Rakshasa 2 million people shifted to shelters Power cut in 5 lakh homes in China