கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது.. ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்.!
Covid virus invented by humans in china
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உலகளவில் கொரோனா நோயசீனாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதாக சீனாவில் வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் சீனாவின் வூஹான் வைரஸ் ஆய்வகத்தில் பாதுகாப்பு இல்லாமல் அங்கு வைரஸ் சோதனை நடத்தப்பட்டதாகவும், கொரோனா வைரஸ் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Covid virus invented by humans in china