2024 இறுதி வரை கொரோனா தடுப்பூசி சாத்தியமில்லை.! அதிகாரியின் அதிர்ச்சி தகவல்.!  - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. பல நாடுகளில் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடைபெற்றுவருகின்றது. இத்தகைய சூழலில் விரைவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று பொதுமக்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர். இந்த நிலையில் தடுப்பூசி நிறுவன அதிகாரி ஒருவரின் கருத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா, மருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை என்றும், எனவே, குறைந்த நேரத்தில் அதிக டோஸ் தடுப்பூசி மக்களுக்கு கிடைக்க சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார். 

இரண்டு டோஸ் தடுப்பூசி கொரோனா நோயாளிகளுக்கு தேவை எனும் பட்சத்தில் உலகம் முழுவதும் 1,500 கோடி தயார் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும், ஆகவே, உலகில் கொரோனா தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் நிச்சயம் ஆகும் என்று கூறியுள்ளார். உற்பத்தியாளர்களின் திறனை விட மிக அதிகமாக கொரோனா தடுப்பூசி தேவையானது ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸ் உள்ளிட்ட ஐந்து சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கோவிட் தடுப்பூசியை உருவாக்க 100 கோடி டோஸ் அளவை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

covid 19 vaccine may not available still 2024


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->