பாகிஸ்தான் : பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை வசப்படுத்திய பயங்கரவாதிகள் - ராணுவ வீரர்கள் குவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணம் பன்னு நகரில் அமைந்துள்ள ராணுவ கன்டோன்மென்ட்டின் வளாகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மையம் உள்ளது. இந்த மையத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அதன் படி, நேற்று முன்தினம் ஒரு பயங்கரவாதியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த நபர் திடீரென போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்கி சரமரியாக தாக்கினார். இதில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த பயங்கரவாதி அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற பயங்கரவாதிகளை விடுவித்தார். 

அதன் பின்னர் அங்கிருந்த பயங்கரவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு மையத்தையே தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அங்கிருந்த மற்ற போலீசார்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர். இது குறித்து ராணுவ வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் படி, அந்த மையத்திற்கு ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் போலீசார்களை மீட்பதற்காக பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையே நேற்று காலை கைபர் பக்துங்வா மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க செய்ததில் நான்கு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Counter Terrorism Center terorist attack police officer in pakisthan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->