அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


கொரோனாவின் மூன்றாவது அலை பல்வேறு நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களாக தொற்று குறைய தொடங்கியது. இதனிடையே மீண்டும் பல நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. அதிபர் ஜோ பைடன் உடன் நெருங்கிய தொடர்பு இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு கமலா ஹாரிஸ் க்குஎந்த அறிகுறியும் வெளிப்படுத்தவில்லை. 

கமலா ஹாரிஸ் தனிமைப்படுத்தப்பட்டு துணை அதிபர் இல்லத்திலிருந்து தொடர்ந்து பணியாற்றுவார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தற்போது நலமுடன் உள்ளார். கொரோனா வழிகாட்டுதல் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி உறுதியான பரிசோதனைக்கு பின்னர் வெள்ளை மாளிகை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona positive for kamala harris


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->