பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. முடிவுக்கு வருகிறது கொரோனோ பாதிப்பு - உலக சுகாதார மையம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவிக்கையில், கொரோனாவால் ஏற்பட்ட அச்சுறுத்தல் முடிவுக்கு வருவதுபோல் உள்ளது. கொரோனாவால் உயிரிப்போர் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் குறைந்துள்ளது. கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் முடிவிற்கு வருவதற்கான அறிகுறி உள்ளது  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Corona is coming to end world health organization inform


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->