இங்கிலாந்தை அதிர வைத்த சர்ச்சை! சிறையிலே சிக்கிய காதல்! கைதியுடன் ரகசிய உறவில் 3 பெண் அதிகாரிகள்...! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷைர் மாநிலத்தில் உள்ள ‘உட்டாக்டர்’ சிறை, கடுமையான குற்றங்கள் செய்தவர்களும், ஆயுள் தண்டனை பெற்றவர்களும் அடைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு சிறையாகும். ஆனால், தற்போது அந்தச் சிறை, பாதுகாப்பு குறைபாடுகளுக்காக அல்ல – அதிர்ச்சிகரமான காதல் சர்ச்சைகளுக்காக தலைப்புகளில் இடம்பிடித்துள்ளது.அந்தச் சிறையில் பணிபுரிந்த 31 வயதான பெண் சிறை அதிகாரி சாரா பார்னெட், ஒரு கைதியுடன் உல்லாச உறவில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 முதல் 24 வரை நடந்த இந்தச் சம்பவம் சிறைத்துறையையே கலக்கமடைய வைத்துள்ளது. தற்போது பார்னெட் தனது பணியில் இருந்து விலகி, ஸ்டாஃபோர்ட்ஷைரின் ரூக்லே என்ற ஊரில் தனியாக ஒரு அழகு நிலையம் (Beauty Salon) நடத்தி வருகிறார். அதே சிறையில் இன்னொரு பெண் அதிகாரி ஹீதர் பின்ச்பெக் (வயது 28) தொடர்பாகவும் அதேபோன்ற சட்டவிரோத தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அவர் ஜோசப் ஹார்டி (31) என்ற கைதியுடன் ரகசியமாக தொடர்பில் இருந்துள்ளார். ஹார்டி 2017 ஆம் ஆண்டு ஒரு நபரை கடுமையாக தாக்கிய குற்றத்தில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர். 2023 பிப்ரவரி 15 முதல் மார்ச் 4 வரை அவர் மற்றும் பின்ச்பெக் தொலைபேசி வழியாக நெருக்கமான உரையாடலில் ஈடுபட்டதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இதனால் பின்ச்பெக் சமீபத்தில் பெர்மிங்காம் கிரவுன் கோர்ட்டில் ஆஜரானார். விசாரணையின் போது, அவர் “அரசு பணியாளராக தன்னுடைய நடத்தை தவறானது” என்று ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கான இறுதி தீர்ப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி அறிவிக்கப்படும் வரை, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சாரா பார்னெட் மீதான வழக்கில் அடுத்த விசாரணை நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன்பும், அதே சிறையில் பணியாற்றிய யோலண்டா பிரிக்ஸ் (வயது 52) என்பவர் ஒரு கைதியுடன் உல்லாச உறவில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. அதனைப் பற்றிய பெருமையைக் கைதி மற்றவர்களிடம் கூறியபோது, சம்பவம் வெளிப்பட்டது.

அதன் பின்னர், லிங்கன் கிரவுன் கோர்ட்டு, யோலண்டாவுக்கு 8 மாத சிறைத் தண்டனை விதித்தது.இத்தகைய தொடர்ச்சியான சர்ச்சைகள் காரணமாக, உட்டாக்டர் சிறை தற்போது கைதிகளுக்கான மையமாக அல்ல, காதல் சர்ச்சைகளுக்கான மையமாக மாறி வருவதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் கிண்டலாக தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Controversy that shook England Love trapped in prison 3 female officers in secret relationship with prisoner


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->