ஈரான் தாமதித்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும்! டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை...! - எப்போது வரும் பதில்...? - Seithipunal
Seithipunal


ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்குமிடையே முன்னெடுக்கப்பட்ட முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை எந்த முடிவும் இன்றி முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற இருந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் திடீரென ரத்து செய்யப்பட்டதால், சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த போர்நிலையை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்த நாடாக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் வாயிலாக, அமெரிக்கா தனது அமைதி ஒப்பந்த முன்மொழிவை ஈரானுக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஒப்பந்த திட்டத்தை ஈரான் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மூன்று போர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தரப்பிலிருந்து தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டபோதிலும், அந்த கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலடியாக அமெரிக்காவும் தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் செய்தியாளர்களுடன் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் ஒரு சாதாரண சண்டையைப் போன்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் எப்போது வேண்டுமானாலும் நிறைவேறக்கூடும்.

ஆனால் தற்போதைக்கு போர் தொடர்ந்து நீடித்து வருகிறது” என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக அவர் ஒரு நிருபரிடம் தொலைபேசி வாயிலாக கருத்து தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரத்தில், “இன்றிரவிற்குள் ஈரான் தரப்பிலிருந்து பதில் வரும் என நம்புகிறேன். அமைதி ஒப்பந்தத்தை ஈரான் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது போல தெரிகிறது. ஆனால் அதற்கான உண்மை நிலை விரைவில் வெளிச்சத்துக்கு வரும்” என்றும் டிரம்ப் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

consequences severe if Iran delays Trump last warning When answer come


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->