பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரம்! - பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களையும் குறிவைத்து தாக்கல்
Conflict intensifies Pakistan Afghanistan border Terrorist organizations also targeting civilians
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக மோதல்கள் தீவிரமாக நடந்து வருகிறது.
குறிப்பாக, கைபர் பக்துவா மாகாணத்தில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு தெஹ்ரிக்-இ-தலிபான் (TTP) குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் குற்றஞ்சாட்டி வருகிறது.

இதற்கு எதிராக ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆதரவு வழங்குவதாக பாகிஸ்தான் புகார் விடுத்துள்ளது.இந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் நேற்று பாகிஸ்தான் படைகள் திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் 4 பாதுகாப்புப் படையினர்கள் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாகிஸ்தான் வரம்பில் பாதுகாப்புப் படையினரை மட்டுமல்ல, பொதுமக்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது இருநாட்டு மோதலின் தீவிரத்தை மேலும் அதிகரித்து வருகிறது.
English Summary
Conflict intensifies Pakistan Afghanistan border Terrorist organizations also targeting civilians