துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொலம்பிய அதிபர் வேட்பாளர் மரணம்..! - Seithipunal
Seithipunal


கொலம்பியா அதிபர் தேர்தல் வேட்பாளர் மிகுய்ல் உரிபே துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் வரும் 2026-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வலதுசாரி ஜனநாயக மைய கட்சியின் முக்கிய உறுப்பினரும், அதிபர் தேர்தல் வேட்பாளருமான மிகுய்ல் உரிபே போட்டியிட இருந்தார். 39 வயதான அவர், கடந்த ஜூன் 07-ஆம் தேதி, கொலம்பியாவின் போன்டிபான் மாவட்டத்தில் உள்ள மொடேலியா என்ற பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவர் பின்னால் இருந்து துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்தார். முதுகு பகுதியில் பலத்த காயங்களுடன் சரிந்த அவரை மீட்டு, உடனடியாக தலைநகர் பொகாட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மிகுய்ல் உரிபே மீது துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டாலும், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், இரண்டு மாதங்கள்சிகிச்சியில் இருந்த மிகுய்ல் உரிபே, சிகிச்சை பலனின்றிஇன்று (ஆகஸ்ட் 11 உயிரிழந்துள்ளார்.  அவரின் மரணத்தை மனைவி மரியா கிளாடியா தராஜோனா எக்ஸ் வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதில், ''நீங்கள் இல்லாமல் வாழ்க்கையின் எஞ்சிய நாட்களை கழிக்க இறைவன் எனக்கு வழிகாட்ட வேண்டும்'' என்றும் உருக்கமாககுறிப்பிட்டுள்ளார். இவரின் மறைவுக்கு கொலம்பியாவின் அரசியல் தலைவர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Colombian presidential candidate dies after being treated for gunshot wounds


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->