கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் திடீர் உயிரிழப்பு: பின்னணியில் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


ஜப்பான், ஒசாகா நகரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கோபயாஷி பார்மாசூட்டிகள் நிறுவனம் கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்கிறது. 

அதன்படி கடந்த ஆண்டு சுமார் 18000 கிலோ மருந்துகளை உற்பத்தி செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் மருந்துகளை எடுத்துக் கொண்ட பலரும் சிறுநீரகக் கோளாறு போன்ற பல்வேறு பிரச்சனைகளை பிரச்சனைகளால் அவதி அடைந்ததாக தகவல் வெளியானது.

இதனை அடுத்து கடந்த 22 ஆம் தேதி நிறுவனத்தின் மருந்துகளுக்கு அரசாங்கம் தடை விதித்தது. இருப்பினும் கடந்த ஒரு வாரத்தில் கொழுப்புகளை குறைக்கும் மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக ஜப்பான் சுகாதாரத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cholesterol lowering drugs took 5 people death 


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->