தைவானுக்கு ஆதரவு அளிப்பதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் - சீனா கடும் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வரும் நிலையில், அமெரிக்க பிரதிநிதிகளின் அடுத்தடுத்த தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்திற்குள்ளாகியது. இதையடுத்து தைவான் எல்லைப் பகுதிகளில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் சீனா தொடர்ந்து போர் பயிற்சி நடத்தி தைவானை அச்சுறுத்தி வருகிறது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர்ப்பதற்றம் நிலவி வரும் நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடும் கோபமடைந்த சீனா, அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்சை, வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் தைவான் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்றும், தைவான் பிரிவினைவாதிகளுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தைவானில் தூண்டுதலை ஏற்படுத்தக் கூடாது என்றும், சீனா மற்றும் தைவான் இடையேயான உறவில் இறையாண்மையை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China warns US to stop supporting Taiwan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->