"ஆசியான் பயிற்சி"... இந்தியா கப்பற்படையை கண்காணித்த சீன கப்பல்கள்...! - Seithipunal
Seithipunal


இந்தியா, வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் புருனே ஆகிய நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் பங்கேற்கும் ஆசியான் கடல்சார் பயிற்சி நேற்று முன்தினம் தென்சீன கடலில் தொடங்கியது. மேலும் வெற்றிகரமாக நடைபெற்ற பயிற்சி நேற்று வியட்நாமில் முடிவடைந்தது.

இந்நிலையில் நேற்று வியட்நாமில் பயிற்சி மேற்கொண்டு இருந்த பொழுது சீன கப்பல்கள் பயிற்சியை கண்காணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ராணுவ மூத்த பாதுகாப்பு அதிகாரி கூறும்பொழுது, சீனாவின் மிலிஷியா வகையை இரண்டு கப்பல்களும், விமானங்களும் போர் பயிற்சியின் பொழுது இந்திய கப்பல்களிடையே நெருங்கிவந்தாலும் பயிற்சியை தடுக்கவில்லை என்றும், சீனா கப்பல்களின் நடவடிக்கையை நாங்கள் கூர்ந்து கவனித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் நோக்கங்களுக்காக இது போன்ற கப்பல்கள் தென் சீனக் கடலில் உலாவுவதாகவும், தென் சீன கடலில் இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கில் சீனா செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China snoop on Asean India naval drill in South China Sea


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->