போரில் ரஷ்யாவுக்கு சீனா உதவ கூடாது - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 5 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரை கடுமையாக எதிர்க்கும் ஐரோப்பா, அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

மேலும் உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து வருகிறது.

இந்நிலையில் போர் தொடங்கிய நாள் முதல் சீனா, ரஷ்யாவுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வரும் நிலையில் உலக நாடுகளின் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக எதிர்த்து வருகிறது.

இதையடுத்து உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு சீனா உதவக்கூடாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சீனாவை வலியுறுத்தி உள்ளார்.

மேலும் காணொலி காட்சி வாயிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த 21 பல்கலைக்கழகங்களின் மாணவர்களிடையே உரையாற்றியபோது, 'சீனா உண்மையில் நடுநிலையாக உள்ளது. சீனா ரஷ்யாவுடன் இணைவதை விட இந்த நடுநிலை சிறந்தது என்றும், ரஷ்யாவுக்கு சீனா உதவாது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியம்' என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China must not help to Russia in Ukraine war


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->