அமெரிக்காவுக்கு எதிராக சீனா சதி செய்திகிறது! - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு!
China is conspiring against America Trump sensational accusation
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த 80-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவில் நேற்று பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவைத் தொடர்ந்து, சீன அதிபர் ஜி ஜின்பிங் மீது அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஜின்பிங், புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுடன் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்கிறார் என்று டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில்,“நீங்கள் அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்யும் போது, தயவுசெய்து விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்”
என்று டிரம்ப் கிண்டலாக பதிவிட்டார்.
“சீனா அமெரிக்க தியாகத்தை மறக்க கூடாது”மேலும், இரண்டாம் உலகப்போரின் போது சீனாவின் சுதந்திரத்திற்காக அமெரிக்க வீரர்கள் தங்கள் இரத்தத்தை சிந்தினர் என அவர் குறிப்பிட்டார்.
“சீனாவின் வெற்றிக்காக பல அமெரிக்கர்கள் உயிர்நீத்தனர். அந்த வீரர்களின் தைரியம், தியாகம் ஆகியவற்றை ஜின்பிங் அரசு மதிக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனா, அமெரிக்க வீரர்களின் தியாகத்தை நினைவில் கொள்ளும் என்று தான் நம்புவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
English Summary
China is conspiring against America Trump sensational accusation