ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்துக்கொள்ள பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ள சீனா..!
China invites Prime Minister to attend Shanghai Cooperation Organization summit
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு வெளியுறவுத்துறை அழைப்பு விடுத்து, வரவேற்பதாக தெரிவித்துள்ளது.
வரும், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 01 ஆகிய நாட்களில் சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குயோ ஜியாகுன் கூறியுள்ளதாவது:
இந்த மாநாட்டில் பங்கேற்கும் இந்திய பிரதமர் மோடியை அழைக்கிறோம் என்றும், அவரை வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சியுடன் பலனளிக்கும் வகையில் முடிவு எடுக்கப்படும் என்றும், ஒற்றுமை, ஒருங்கிணைப்பு மூலம் வளர்ச்சி குறித்து இந்த அமைப்பு அடுத்த கட்டத்துக்கு செல்லும் என நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
China invites Prime Minister to attend Shanghai Cooperation Organization summit