தைவான் தனிநாடாக அறிவிக்கப்பட்டால் போர் தொடுக்க ஒரு போதும் தயங்கமாட்டோம்.! சீனா எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தைவான் தனிநாடாக அறிவிக்கப்பட்டால் போர் தொடுக்க ஒரு போதும் தயங்க மாட்டோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா இதுவரை தைவானை ஆட்சி செய்ததில்லை. ஆனால் தைவான் தீவைச் சீனா தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகவே கருதுகிறது.

இருப்பினும் சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், தைவான் மீதான நடவடிக்கைகளை சீனா தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றும் அதனை பிரிக்க முற்பட்டாலும், தைவானை தனிநாடாக அறிவித்தாலும் தைவான் மீது போர்தொடுக்க சீனா ஒருபோதும் தயக்கம் காட்டாது என்று சீனா பாதுகாப்புத்துறை அமைச்சர் வெய் பெங்கி தெரிவித்துள்ளார்.

இதனால் சீனா மற்றும் தைவான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China declare war on Taiwan if Taiwan leaves china


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->