வீட்டு வேலை பார்த்த முன்னாள் மனைவிக்கு ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஐந்து வருடம் வீட்டு வேலைகளை கவனித்து வந்த முன்னாள் மனைவிக்கு ஐந்தரை லட்சம் வழங்குமாறு சீன நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சீனாவில் தற்போது புதிய சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வீட்டில் கூடுதலான பொறுப்புகளை ஏற்று பணியாற்றி வரும் கணவன் அல்லது மனைவிக்கு இழப்பீட்டு தொகையை பெற இந்த சட்டத்தின் மூலமாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு கணவரிடம் விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி வழக்கு தொடுத்துள்ளார். திருமணம் செய்து ஐந்து வருடத்தில் விவாகரத்து பெற்றுக் கொண்ட நிலையில், தான் செய்த வேலைகளுக்கு கணவரிடம் ஊதியம் கேட்டு வழக்கு தொடுத்துள்ளார். 

விசாரணையில், திருமணம் ஆனதிலிருந்து ஐந்து வருடங்களாக குழந்தையை கவனிப்பது, வீட்டு வேலை செய்வது என்று குடும்ப பொறுப்புகளை தான் மட்டுமே கவனித்து வந்ததாகவும், கணவர் எதையுமே பொருட்படுத்தாது இருந்ததாகவும் கூறியுள்ளார். இருதரப்பு வாதங்களையும் ஏற்ற நீதிபதி, மனைவிக்கு 50 ஆயிரம் யுவான் (இந்திய மதிப்பில் 5 லட்சத்து 60 ஆயிரம்) வழங்குமாறும், குழந்தையை கவனித்து வருவதால் மாதம் 20 ஆயிரம் யுவான் (22 ஆயிரம் ரூபாய் இந்திய மதிப்பில்) வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Court Judgement about Divorce Couple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->