மூக்கு பொடப்பா இருந்தா அப்படிதான்.. ஆர்வக்கோளாறால் கரண்ட் கட்.. இருளில் மூழ்கிய நகரம்.! - Seithipunal
Seithipunal


ஆர்வக்கோளாறில் மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்ததால், நகரமே இருளில் மூழ்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

பொதுவாக உடற்பயிற்சி செய்பவர்கள் பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை செய்வது வழக்கம். தினமும் உடற்பயிற்சி செய்து தங்களின் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது சிலருக்கு பிடித்த விஷயமாகும். 

இந்த நிலையில், வித்தியாசமான முறையில் வாலிபர் ஒருவர் உடற்பயிற்சி செய்து, ஊராரின் வயித்தெரிச்சலுக்கு உள்ளாகியுள்ளார். சீன நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியான செங்டூ பகுதியை சேர்ந்த வாலிபர், அங்கு இருந்த மின்கம்பத்தில் ஏறி, கம்பத்தின் உச்சிக்கு சென்று உடற்பயிற்சி செய்துள்ளார். 

இதனைக்கண்ட மக்கள் முதலில் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தாலும், மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு வாலிபரின் உயிரை காப்பாற்ற கூறி கோரிக்கை வைத்துள்ளனர். 

இதனையடுத்து, எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், செங்டூ நகரில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது. பின்னர் இது காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, அங்கு வந்த காவல்துறையினர் ஆர்வக்கோளாரில் மின்கம்பத்தில் ஏறி உடற்பயிற்சி செய்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Chengdu Town Power Cut due to Youngster Did Exercise in Power Supply line


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal