பாகிஸ்தான்.! குழந்தைகள் மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் குழந்தைகள் மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் குல்பெர்க்கில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயானது மற்ற பகுதிகளிலும் பரவி கடும் புகை வெளியேறிய நிலையில் தொடர்ந்து மூன்றாவது மாடியில் உள்ள மருத்துவ இடங்களும் முழுவதுமாக தீ பரவியுள்ளது.

இதனால் மருந்து கிடங்கில் இருந்த பல லட்சம் மதிப்பிலான மருந்துப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து 7 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப்படையினர் அனைவரையும் அப்புறப்படுத்தியதால் அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தில் இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

மேலும் இந்த தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Childrens hospital fire in Pakistan


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal