'பாபர்' பெயரில் மசூதிகள் கட்ட, பெயர் வைக்க தடைவிதிக்கக் கோரி மனு; தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


பாபர் மசூதி என்ற பெயரில் மசூதிகள் கட்டுவதற்கு அல்லது மசூதிகளுக்கு பெயரிடுவதற்கு நாடு முழுவதும் தடைவிதிக்கக் கோரிய பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. 

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி போன்ற ஒரு மசூதியைக் கட்டப்போவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பில், பாபர் ஒரு 'படையெடுப்பாளர்', அவர் இந்துக்களை அடிமைகள் என்றும் குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டி, அவர் பெயரில் மசூதிகள் கட்டுவது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. விசாரணைக்கு நீதிபதிகள் மறுத்ததைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதனால் குறித்த மனு, திரும்பப் பெறப்பட்டதாகக் கருதி தள்ளுபடி செய்யப்ப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court dismisses petition seeking ban on construction and naming of mosques in the name of Babur


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->