இந்தோனேஷியாவில் மர்மமாக இருக்கும் விமான விபத்துகள்... காரணம் என்ன?..! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் நாட்டைச் சார்ந்த ஸ்ரீ விஜயா ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் ரக விமானம், கடந்த சனிக்கிழமை பிற்பகலில் ஜகார்த்தாவில் இருந்து போர்னியோ தீவு நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட 4 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் கொண்ட தொடர்பை இழந்து விட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, ஜாவா கடலில் விழுந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்ட நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 62 பயணிகளும் உயிரிழந்த நிலையில், கருப்பு பெட்டியை ஆய்வு செய்த பின்னர் விபத்திற்கான காரணம் தெரிய வரலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2012 ஆம் வருடம் ஸ்ரீ விஜயா நிறுவனம் விபத்திற்குள்ளான விமானத்தை வாங்குவதற்கு முன்னதாக, அந்த விமானத்தை யுனைடெட் ஏர்லைன்ஸ் பயன்படுத்தி வந்துள்ளது. விமானத்தின் பராமரிப்பு என்பதையும் தாண்டி, இந்தோனேசிய புவியியல் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றமும் விபத்து ஏற்படுவதற்கு பெரும் காரணமாக இருக்கிறது. 

இந்த பகுதியில் அடிக்கடி புயல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை, மின்னல் தாக்குதல் போன்றவை அதிகமாக உள்ளது. இதுமட்டுமல்லாது எரிமலை சாம்பல்கள் விமானத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆசிய கண்டத்திலேயே அதிகளவு விமான விபத்துகளை எதிர் கொண்ட நாடாக இந்தோனேசியா இருக்கிறது. 

அங்கு நடந்த 104 விபத்துக்களில் 2357 பேர் உயிரிழந்தனர். மேலும், மோசமான விமான பராமரிப்பு, தகவல்தொடர்பு தோல்வி மற்றும் இயந்திரக் கோளாறு போன்ற பல பிரச்சனைகள் காரணமாக விபத்துக்கள் ஏற்படுகிறது. விமான பாதுகாப்பு தொடர்பாக இந்தோனேசிய அரசு இனியும் அலட்சியமாக இருந்தால், பின்வரும் நாட்களில் பெரும் விபத்தை சந்திக்கலாம் எனவும் விமான பாதுகாப்பு வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Causes of Indonesia Air Traffic Flight Accidents


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->