உக்ரைனுக்கு மேலும் 100 டிரோன்கள், பீரங்கி தடுப்பு ஆயுதங்களை அனுப்பியது பிரிட்டன்.! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கு மேலும் 100 டிரோன்கள், பீரங்கி தடுப்பு ஆயுதங்களை பிரிட்டன் அனுப்பியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்கரைனின் 1000 கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை அளித்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு மேலும் 100 டிரோன்களையும், பீரங்கி தடுப்பு ஆயுதங்களையும் பிரிட்டன் அனுப்பி வைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் துப்பாக்கிகள், பேட்டரி ராடர் எதிர்ப்பு சாதனங்கள், ஐம்பதாயிரம் தோட்டாக்கள் ஆகியவற்றுடன் 100 டிரோன்களும் கப்பல் மூலமாக உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் 1600 பீரங்கி தடுப்பு சாதனங்களும், 6900 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Britain sends 100 drones to Ukraine


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->