#Breaking : ரஷ்யாவிற்கு தடை விதித்த பிரிட்டன் அரசு.!!
Brirain bans russia private jets
கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதனிடையே உக்கிரன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய படைகளுக்கு உத்தரவிட்டுள்ள அந்நாட்டு அதிபர் புதினுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதினின் சொத்துக்களை முடக்க அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதின் மற்றும் லாவ்ரோவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க நேட்டோ தலைவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரிட்டன் வான்வெளியில் ரஷ்யாவின் தனியார் ஜெட் விமானங்கள் பறக்கவும், தரையிறங்கவும் பிரிட்டன் அரசு தடை வைத்துள்ளது.
English Summary
Brirain bans russia private jets