வலிப்பு, வாந்தி... ஸ்கேன் செய்து பார்க்கையில் காத்திருந்த அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


சீனாவை சேர்ந்த வாங்க் என்ற 36 வயது வாலிபர் வலிப்பு நோயால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து அவருக்கு வாந்தி ஏற்பட்டு எப்பொழுதும் மிகவும் சோர்வுடன் காணப்படுவார். அதுமட்டும் இல்லாமல் அவருக்கு இடது கை மற்றும் காலும் மரத்துப் போய் உள்ளது. 

இதன் காரணமாக அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இவர் அன்றாடம் படும் சிரமங்களை கண்ட குடும்பத்தினர், பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இருப்பினும், எந்த பலனும் கிடைக்கவில்லை. 

தொடர்ந்து அடுத்தடுத்து மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை அளித்தவாறு இருந்துள்ளனர். சமீபத்தில் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த பொழுது அவருடைய மூளைக்குள் நாடாப்புழு ஒன்று உயிருடன் நகர்வது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த நாடாப்புழு அவரின் மூளையை கொஞ்சம் கொஞ்சமாக அரிது சாப்பிட்டு வந்துள்ளது. இதனால் தான் அவருக்கு வலிப்பு நோய், வாந்தி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் பலத்த ரிஸ்க்கில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 5 இன்ச் நீளமுள்ள நாடாபுழுவை வெளியே எடுத்துள்ளனர். 

கடந்த 15 ஆண்டுகளாக அந்த புழு அவரது மூளைக்குள் வாழ்ந்து வந்துள்ளது. அதன் பின் அந்தபுழு  நீக்கப்பட்ட பின்னர் வாக்கிங்கின் உடல்நலம் தேறி வருகின்றது. சரிவர வேக வைக்காத இறைச்சிகளை உட்கொள்ளுவதால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brain fault in body


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal