ஆஸ்திரேலியா: பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய முன்னாள் மாணவன் கைது.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா: பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய முன்னாள் மாணவன் கைது.!

உலகின் மிகச் சிறிய கண்டம் ஆஸ்திரேலியா. இங்கு மேற்கு ஆஸ்திரேலியாவில் டூ ராக்ஸ் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் அங்குள்ள கார் பார்க்கிங்கில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பள்ளி கட்டிடங்கள் மற்றும் கார்கள் சேதமடைந்தன. 

இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது பதிநாணிந்து வயது சிறுவன் என்றும், அவர் அதே பள்ளியின் முன்னாள் மாணவன் என்றும் தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து சிறுவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy arrested for gun shoot on school in austrelia


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->