அமெரிக்க தேசிய பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!
bomb threat to national zoo in america Washington
அமெரிக்க தேசிய பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!
அமெரிக்கா நாட்டின் தலைநகரமான வாஷிங்டனில் 163 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பழமை வாய்ந்த தேசிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சுமார் மூன்று ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தவிர ஆண்டு முழுவதும் செயல்படும் இந்த பூங்காவிற்கு தினந்தோறும் குழந்தைகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த பூங்கா நிர்வாக அலுவலகத்துக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது.

அதில் பேசிய நபர் பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக பூங்கா வளாகத்தைத் தற்காலிகமாக மூடி, பார்வையாளர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.
அதன் பின்னர் சம்பவம் குறித்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்ககளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து பூங்காவை துல்லியமாக சோதனையிட்டனர். ஆனால், பூங்காவில், வெடிகுண்டோ அல்லது சந்தேகத்துக்குரிய வேறேதும் வெடிபொருளோ கிடைக்கவில்லை.
அப்போது தான் இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது வெளிச்சத்திற்கு வந்தது. இருப்பினும், போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பூங்காவிற்கு மிரட்டல் விடுத்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
English Summary
bomb threat to national zoo in america Washington