லண்டனில் ரத்தக் கறை...! சவுத்தால் பகுதியில் 26 வயது இந்திய வம்சாவளி வாலிபர் கத்தியால் குத்திக் கொடூரக் கொலை...!
Blood stains London 26 year old Indian origin youth brutally stabbed death Southall
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் சவுத்தால் பகுதியில் நடைபெற்ற கொடூர கத்திக்குத்து சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டார்மர்ஸ் வெல்ஸ் லேன் சந்திப்புக்கு அருகே உள்ள நார்த் ரோட்டில் இந்த ரத்தச் சாய்ந்த தாக்குதல் அரங்கேறியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயதான குர்பேஜ் சிங் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

மேலும், சுமார் 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபரும் தாக்குதலில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.தகவல் கிடைத்தவுடன் காவலர்கள் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.எனினும், பலத்த கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான குர்பேஜ் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஏழு இளைஞர்களை காவலர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணைக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் ஆதார ஆய்வுகளுக்குப் பிறகு, அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், தேவைப்படும் நேரத்தில் அவர்கள் மீண்டும் ஆஜராக வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கான காரணம், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் பின்னணி குறித்து காவலர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Blood stains London 26 year old Indian origin youth brutally stabbed death Southall