உலகின் காஸ்ட்லியான விவாகரத்து; ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம் வழங்கிய பில் கேட்ஸ்..!
Bill Gates paid a total of Rs 112 800 crore in alimony to his wife
உலகின் முன்னணி பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் தனது மனைவிக்கு விவகாரத்தின் ஜீவானம்சமாக மீதம் கொடுக்க வேண்டி இருந்த ரூ.71,100 கோடி வழங்கியுள்ளார். 27 ஆண்டுகளாக மனைவி மெலிண்டா கேட்ஸ் உடன் வாழ்ந்து வந்த பில் கேட்ஸ் கடந்த 2021-இல் மனைவியை விவாகரத்து செய்தார். இந்த தம்பதிக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
முன்னதாக, கடந்த 2000 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இருந்து 2024 மெலிண்டா விலகி தனியாக ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கினார். 2021-இல் ஒப்புக்கொண்ட விவாகரத்து ஒப்பந்தப்படி மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.

ஏற்கனவே, பில்கேட்ஸ், ரூ.41,700 கோடியை மெலிண்டாவுக்கு வழங்கிய நிலையில், இறுதியாக தற்போது ரூ.71,100 கோடியை வழங்கியுள்ளார். இதன் மூலமாக, மெலிண்டாவுக்கு பில் கேட்ஸ் மொத்தமாக 1.05 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இது குறித்து சமீபத்திய வரி தாக்கல் அறிக்கைகளின்படி இது தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த பணத்தை பெண்கள் முன்னேற்றத்துக்கு செலவழிக்க போவதாக மெலிண்டா கூறியுள்ளார்.
பில் கேட்ஸ் உடனான விவாகரத்துக்கு, அவர், சிறுமிகளை கடத்தி பணக்காரர்களுக்கு போகப்பொருளாக மாற்றிய பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் இருந்த தொடர்பும் ஒரு முக்கியக் காரணம் என்று மெலிண்டா கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார். அதேவேளை, ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸ் இருக்கும் புகைப்படங்களும் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Bill Gates paid a total of Rs 112 800 crore in alimony to his wife