இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் அன்று பிறந்த பெண் குழந்தைக்கு "சிந்தூரி" பெயர் சூட்டிய பெற்றோர்! - Seithipunal
Seithipunal


‘ஆபரேஷன் சிந்தூர்’ நடந்து கொண்டிருந்த அதே நாளில் பிறந்த பெண் குழந்தைக்கு “சிந்தூரி” எனப் பெயரிட்ட பிகாரைச் சேர்ந்த பெற்றோரின் நடவடிக்கை நெகிழ்ச்சியையும் தேசப்பற்று உணர்வையும் பரப்பியுள்ளது.

மே 7ஆம் தேதி அதிகாலை, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஏவுகணைகளின் மூலம் அழித்தது. இந்த தாக்குதலுக்குத் 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டது.

அன்றைய தினமே, பிகார் மாநிலத்தின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள பால்தி மகேஷ்பூர் கிராம மருத்துவமனையில், குந்தன் குமார் மண்டல் மற்றும் அவரது மனைவி சிம்பிள் தேவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையை நினைவுகூரும் வகையில், தங்கள் மகளுக்கு “சிந்தூரி” எனப் பெயரிட்டனர்.

“இந்த வெற்றியும், என் மகளின் பிறப்பும் ஒரே நாளில் நிகழ்ந்தது எங்கள் குடும்பத்திற்கு பெருமையளிக்கிறது. இந்திய ராணுவத்தை மதிக்கும் வகையிலும், மகள் நாட்டுக்காக பெருமை சேர்க்கும் விதமாக வளரட்டும் என்பதற்கும் இந்தப் பெயர் வைத்தோம்,” என குந்தன் தெரிவித்தார்.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி, பலரும் குடும்பத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bihar parents child name Sindoori


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->