மேயோன் எரிமலை வெடிக்கும் அபாயம்..! சுற்றுலா பயணிகளுக்கு தடை..! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் சுமார் 300க்கும் மேற்பட்ட எரிமலைகளுக்கு பிறப்பிடமாக உள்ளது.இதில் 24 எரிமலைகள் ஆக்டிவ் நிலைகளில் உள்ளன. அவ்வப்போது எரிமலைகள் வெடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தென்கிழக்கே அமைந்துள்ள லூசன் தீவில் மேயோன் எரிமலை வெடிக்கும் அபாயத்தில் இருப்பதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்பிற்கான எச்சரிக்கையை இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து எரிமலையிலிருந்து 6 கீ.மீ சுற்றுளலவில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மலைச்சரிவுகளும், வெடிப்புகளும் ஏற்படும் அபாயம் இருப்பதால் போக்குவரத்து மற்றும் இதர பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து எரிமலை பகுதிகளில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருப்பதால் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிமலையின் உச்சிக்கு அருகே விமானங்கள் பறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 2460 மீட்டர் உயரமுள்ள மேயோன் எரிமலை கடந்த 400 ஆண்டுகளில் 50 முறைக்கும் மேல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bans Tourists for Mayon Volcano Eruption Threat in Phillipines


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->