சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை நீட்டிப்பு...! - செப். 30 வரை அதிரடி உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு...! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் உலக வர்த்தகத்திலும் வேளாண் துறையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் உரங்களின் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நாட்டின் வேளாண் உற்பத்தி மற்றும் விளைச்சல் நிலைமை குறித்து கவலை அதிகரித்துள்ளது.குறிப்பாக வரவிருக்கும் பருவத்தில் கரும்பு சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டால், சர்க்கரை உற்பத்தி குறைந்து உள்நாட்டு சந்தையில் தட்டுப்பாடும் விலை உயர்வும் உருவாகும் அபாயம் நிலவுவதாக பொருளாதார வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழலை முன்னிட்டு, இந்தியாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது. உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை கட்டுக்குள் இருக்கவும், நாட்டின் தேவைக்கான இருப்பு பாதுகாக்கப்படவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு முழுமையான தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் சர்க்கரையின் விலை ஏற்கனவே உயர்வை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், எதிர்கால பற்றாக்குறையை தவிர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தேவையே முதன்மை என்ற அடிப்படையில், ஏற்றுமதி தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கச்சா சர்க்கரை, வெள்ளை சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ளிட்ட அனைத்து வகை சர்க்கரைகளும் தடை செய்யப்பட்ட ஏற்றுமதி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக விளங்கி வரும் நிலையில், இந்த தடை உத்தரவு உலக சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வர்த்தக நிபுணர்கள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ban on sugar exports extended Central government issues order till Sept 30


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->