ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தல் வீடியோவை வெளியிட்டு பாகிஸ்தானுக்கு சவால் விட்டுள்ள பலூச் விடுதலை படை..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டு அரசுக்கு எதிராக தொடர்ந்து மோதல் போக்கு காணப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து பலூசிஸ்தானை பிரித்து தரும்படியும், பாகிஸ்தானின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பலூச் விடுதலை படை (பி.எல்.ஏ.)செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மார்ச் 11-ந்தேதி ரெயில்வே தண்டவாளங்களை வெடிக்க செய்தும், துப்பாக்கி முனையிலும் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை 450 பயணிகளுடன் பலூச் விடுதலை படை கடத்தி சென்றது. ரயிலில் இருந்த  பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை அவர்கள் விடுவிவித்தனர்.  ஆனால், மீதமிருந்த 100-க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக சிறை பிடித்தனர்.

இந்த ரெயிலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், போலீசார், உளவுத்துறை அதிகாரிகளும் பயணித்துள்ளனர். அவர்களும் பணய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பயணிகள் பலர் மீட்கப்பட்டனர் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

இந்நிலையில், பலூச் விடுதலை படையின் ஊடக பிரிவான ஹக்கல், 35 நிமிடங்கள் ஓட கூடிய தர்ரா-இ-போலன் 2.0 என்ற புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. ரெயில் கடத்தலை கொடூர சம்பவம் என பாகிஸ்தான் ராணுவம் கூறியதற்கு முற்றிலும் வேறுபட்ட வகையில் இந்த வீடியோ உள்ளது. இதில், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக கடத்தல் பகுதியில் இருந்து வேறிடத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக உள்ளது.

அத்துடன், 200 பாகிஸ்தான் அதிகாரிகளை, 02 நாட்களாக பணய கைதிகளாக வைத்திருப்பதற்கு முன், தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து அதனை தகர்த்து, ரெயிலை கடத்திய விவரங்களை விவரங்கள் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் ராணுவமோ 30 மணிநேர முற்றுகை மற்றும் தாக்குதலில் 33 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் என தெரிவித்தது. 

அத்துடன், 23 வீரர்கள், 03 ரெயில்வே ஊழியர்கள் மற்றும் 05 பயணிகள் மட்டுமே பலியானார்கள் என்றும் தெரிவித்தது. ஆனால், பலூச் படையோ, ரெயில் கடத்தலில் பணய கைதிகளாக சிக்கிய 214 பாகிஸ்தானிய ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என தெரிவித்துள்ளது.

முன்னதாக பி.எல்.ஏ. படைக்கு பெரிய இழப்பு என பாகிஸ்தான் ராணுவம் கூறியிருந்ததற்கு நேர்மாறாக படை, பெயர்கள் மற்றும் புகைப்படங்களை பி.எல்.ஏ. வெளியிட்டுள்ளது. பலூசிஸ்தானில் பி.எல்.ஏ. படையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளதுடன், அவர்களுடைய வளர்ச்சியையும் வெளிப்படுத்தி பாகிஸ்தான் ராணுவத்திற்கு சவால் விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Baloch Liberation Army challenges Pakistan by releasing video of Zafar Express train hijacking


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->