இந்திய நபர் மீது தாக்குதல்: ஹிந்துக் கோவிலுக்குள் இனவெறி வாசகம்: ஆஸ்திரேலியா மர்ம நபர்கள் அட்டூழியம்..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் ஹிந்துக் கோவில் மீது இனவெறியில் கருத்துகள் எழுதப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில், கார் பார்க்கிங் பிரச்சினை காரணமாக சரண்ப்ரீத் சிங் என்பவரை மர்ம கும்பல் ஒன்று இனவெறி கருத்துக்கள் கூறி திட்டியது. அத்துடன் அவர் முகம் மற்றும் வயிற்று பகுதிகளில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினர். 

இதில் படுகாயம் அடைந்த சரண்ப்ரீத் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றநிலையில்,இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா மெல்போர்னின் போர்னியா பகுதியில் நகரில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் கோவிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அங்கு அவர்கள் சிவப்பு பெயின்ட்டில் இனவெறி ரீதியில் வாசகங்களை எழுதிச் சென்றுள்ள சம்பவம் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், அந்த பகுதியில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் உணவகங்களிலும் இந்த கும்பல் இதேபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து அப்பகுதி ஹிந்துக்கள் கூறியதாவது: எங்களது அடையாளம், வழிபாட்டுக்கான உரிமை மற்றும் மத சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உணர்கிறோம் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றதோடு, கோவில் நிர்வாகிகளுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Australian assailants write racist graffiti inside Hindu temple


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->