ஆஸ்திரேலியா பிரதமர் தேர்தல்.. பிரதமர் ஸ்காட் மோரிசன் தோல்வி.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தோல்வியை தழுவியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இன்றைய நேரடி தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்ற மொத்தமுள்ள 151 உறுப்பினர் இடங்களில் 76 உறுப்பினர் இடங்கள் அவசியம் என்ற நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் ஸ்காட் மாரிசன் தலைமையிலான லிபரல் கட்சி கூட்டணி 52 உறுப்பினர் இடங்களையும், அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 உறுப்பினர் இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் 31வது புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் பொறுப்பேற்க உள்ளார். மேலும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று லிபரல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia prime minister election


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->