மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் கிழக்கு ஜப்பானை நெருங்கும் 'Dujuan' புயல்; ஒத்திவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டிகள்..! - Seithipunal
Seithipunal


2026-ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான் நாட்டில், ஐச்சி மற்றும் நகோயா பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 19-ஆம் தேதி போட்டிகள் அதிகாரபூர்வமாக தொடங்கியது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பல்வேறு வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். ஆனால், போட்டிகள் தொடங்கிய சில நாட்களிலேயே அங்கு நிலவும் மோசமான வானிலை, போட்டி ஏற்பாட்டாளர்களுக்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சீரற்ற காலநிலை காரணமாக தற்போது சக்திவாய்ந்த  'டுஜுவான்' (Dujuan) பெயரிடப்பட்டுள்ள புயல்  உருவாகி வருகிறது. இந்தப் புயல், மணிக்கு 162 கிலோமீட்டர் என்ற அதிவேகத்தில் நகர்ந்து வருகிறதாக கூறப்டுகிறது. குறித்த  'டுஜுவான்' (Dujuan) புயல் அடுத்த 72 மணி நேரத்தில்  பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

இதன் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, பல பகுதிகளுக்கு Red Alert விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜப்பானை நோக்கி டுஜுவான் புயல் நகர்ந்து வரும் நிலையில், டோக்கியோ அருகே உள்ள சிபா மாகாணத்தில் உள்ள போசோ தீபகற்த்தைக் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புயல் குறிப்பாக, டோக்கியோவை உள்ளடக்கிய கான்டோ பகுதியிலும், சிபா மாகாணத்திலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆண்டில், ஜப்பானைத் தாக்கும் 25-வது புயல் டுஜுவான் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த சூழலில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற இருந்த குதிரையேற்றப் பிரிவின் (Eventing) போட்டி டுஜுவான் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் மட்டுமின்றி, வீரர்கள் தங்கியிருக்கும் இடங்கள் மற்றும் அவர்கள் பயணிக்கும் பகுதிகளிலும் வானிலை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இன்றைய தகவலின்படி, முழு ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்படவில்லை என்றும், மோசமான வானிலை காரணமாகக் குறிப்பிட்ட சில போட்டிகளின் அட்டவணையில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அடுத்த சில மணி நேரங்களில் புயலின் பாதை மற்றும் மழையின் தீவிரம் எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்தே, மேலும் போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா அல்லது அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது குறித்து தெரியவரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Asian Games events postponed due to Typhoon Dujuan approaching eastern Japan


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->