02-வது முறையாக ஆஸ்திரேலிய பிரதமரான ஆண்டனி அல்பனிஸ்; பிரதமர் மோடி வாழ்த்து..!
Antony Albanese becomes Australian Prime Minister for the second time Prime Minister Modi congratulates him
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 150 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். அந்த வகையில் இன்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, ஆஸ்திரேலிய பாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமராக 02-வது முறையாக பதவியேற்க்கவுள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ்க்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ''ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஆண்டனி அல்பனிஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். தேர்தல் முடிவுகள் ஆண்டனி தலைமையின் கீழ், ஆஸ்திரேலியா மக்கள் வைத்திருக்கும் நீடித்த நம்பிக்கையை குறிக்கிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான நமது பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வையை முன்னேற்றவும் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Antony Albanese becomes Australian Prime Minister for the second time Prime Minister Modi congratulates him