சீச்சி என்ன வினோத பழக்கம் இது.? 20 வருடங்களாக மெத்தைகளை சாப்பிட்டு வரும் அமெரிக்க பெண்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சார்ந்த பெண் ஒருவர், தான் வினோதமான ஒரு விஷயத்திற்கு  அடிமையாக இருப்பதாக  ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது  அனைவரையும் அதிர்ச்சியிலும் அதேநேரம் வியப்பிலும் ஆழ்த்தி இருக்கிறது.

அமெரிக்காவைச் சார்ந்தவர்  ஜெனிபர். இவர் கடந்த 25 வருடங்களாக நாம் படுத்து உறங்கும்  மெத்தைகளையும் அவற்றில் இருக்கும் பஞ்சையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்திருக்கிறார். ஐந்து வயதில் இருந்து தான் இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக தெரிவித்துள்ள ஜெனிஃபர். முதன்முதலாக தங்கள் வீட்டில் இருந்த காரின் இருக்கைகளைக் கிழித்து அவற்றில் இருந்த பஞ்சுகளை சாப்பிட்டதன் மூலம்  இந்தப் பழக்கம் தனக்குத் தொற்றிக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவைச் சார்ந்த பி எல் சி என்ற தொலைக்காட்சி நிறுவனம் என்னுடைய வினோதமான புழக்கங்கள் என்ற நிகழ்ச்சியை  நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது வினோதமான பழக்கம் பற்றி  மனம் திறந்து இருக்கிறார் ஜெனிபர். அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள அவர் தன்னால் மெத்தைகளை சாப்பிடுவதை நிறுத்த முடிவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இது பற்றி தொடர்ந்து பேசி உள்ள அவர் ஒருமுறை அந்த மெத்தைகளில் உள்ள அனைத்து பஞ்சுகளும் தீர்ந்துவிட்டால் தான் சாப்பிடுவதை நிறுத்தி விடுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த மெத்தையில் இருந்து துர்நாற்றம் வீசினாலும் தன்னால் சாப்பிட முடியாது எனவும் கூறி இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள் ஜெனிஃபர் உடனடியாக இந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் அவரது கல்லீரல்கள்  பாதிக்கப்படுவதோடு குடலில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக  தெரிவித்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An aerican woman developing an addiction of eating matresses for two decades


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->