அடிப்படை உரிமைகளுக்காக போராடும் மக்கள் பக்கம் அமெரிக்கா நிற்கும்! ஐநாவில் ஆதரவு அளித்த ஜோ பைடன்! - Seithipunal
Seithipunal


ஈரான் போராட்டக்காரர்களுக்கு வணக்கம்! ஈரான் மக்கள் துணிச்சலானவர்கள்!

ஈரான் நாட்டில் குர்கிஸ்தான் மாகாணத்தில் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம் பெண் கடந்த 13ஆம் தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையின் போது கடுமையான தாக்குதலுக்கு உள்ளான அப்பெண் போலீஸ் நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.கடந்த 17ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா அமினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசார் தரப்பிலிருந்து மாஷா அமினி மாரடைப்பால் உயிரிழந்தார் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஹிஜாப் சரியாக அமையவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக அவருக்கு ஆதரவாக ஈரானில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் இதுவரை 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐநா சபையின் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "ஈரான் போராட்டக்காரர்களுக்கு வணக்கம்! என தெரிவித்து தனது உரையை தொடங்கினார். ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும், துணிச்சலான ஈரான் மக்கள் இப்பொழுது தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடுகிறார்கள். ஈரானின் துணைச்சலான பெண்களுடன் அமெரிக்கா துணை நிற்கும் என அறிவித்துள்ளார். 

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு ஈரானில் நடைபெற்ற மிகவும் முக்கியமான போராட்டங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக வடக்கு ஈரானில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசுவதும், போலீஸ் வாகனங்கள் மற்றும் குப்பைத்தொட்டிகளுக்கு தீ வைத்தும் அரசாங்கத்திற்கு எதிராக முழுக்கமிட்டு தங்களை எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

 இந்த போராட்டத்தில் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

America will stand by people fighting for basic rights Joe Biden supported in the UN


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->