அமெரிக்காவை தாக்கிய சூறாவளி புயல்: 2000 விமானங்கள் ரத்து! பயணிகளின் நிலை? - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் நேற்று ஏற்பட்ட கடுமையான சூறாவளி புயல் காரணமாக விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையுடன் 75 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று அடித்தது. இதனால் சிகாகோ தெற்கு பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் சேதம் அடைந்து மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதால் 97 ஆயிரம் பேர் இருளில் மூழ்கியுள்ளனர். 

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளும் முடங்கியுள்ளது. சிகாகோ விமான நிலையம் உள்பட பல்வேறு விமான நிலையங்களில் 2400 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 2000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதனால் அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் அகதி அடைந்துள்ளனர். பல்வேறு நகரங்களில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America hurricane 2000 flights canceled


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->