உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இப்போரை கடுமையாக எதிர்க்கும் ஐரோப்பா, அமெரிக்கா உள்பட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

மேலும் உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைனுக்கு கூடுதலாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த தொகுப்பில், ஹிமார்ஸ் எனப்படும் அதிநவீன ராக்கெட் ஏவுகணை அமைப்புகள், 75,000 ரவுண்டுகள் கொண்ட பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் 50 கவச மருத்துவ சிகிச்சை வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்ய தாக்குதலிருந்து உக்ரைன் விடுபடும் வரை அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America extend another 1 billion worth army package to ukraine


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal