உக்ரைனுக்கு கூடுதலாக 1 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முடிவு - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவை கண்டித்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை செய்து வருகிறது.

மேலும் நாளுக்கு நாள் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் உக்ரைனின் 11 இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள மேலும் 1 பில்லியன் மதிப்புடைய ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதுவரை  உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள நிதி தொகுப்புகளில் இதுவே அதிக தொகையாகும். மேலும் இந்த தொகுப்பில் தொலைதூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள், மருத்துவ வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America decides to give 1 billion worth weapons to ukraine


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->