அமெரிக்காவில் உளவு வேளை பார்த்த சீன எஞ்சினியர் - 8 ஆண்டு சிறை வழங்கிய அமெரிக்க நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சீன நாட்டைச் சேர்ந்தவர் ஜி சாவோகுன். என்ஜினீயரான இவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்க நாட்டிற்குச் சென்று, அங்கு உளவு வேலையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அங்கு இவர் சீன நாட்டின் உளவு அமைப்பின் உத்தரவுப்படி அமெரிக்கா நாட்டில் உள்ள விமான வர்த்தக ரகசியங்களை திருட முயற்சி செய்துள்ளார்.

மேலும், அங்கு அவர் ஆள் சேர்ப்புக்காக விஞ்ஞானிகளையும், என்ஜினீயர்களையும் அடையாளம் கண்டுள்ளார். இதன் காரணமாக அவர் மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்க அட்டார்னி ஜெனரலுக்கு அறிவிக்காமல், வெளிநாட்டு அரசின் ஏஜெண்டாக செயல்பட்டதற்காக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு எட்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

america court eight years jail to china engineer for spies


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->