உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்.!
america condemns for russiya missile attack to ukraine
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷியா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில்ஒரு ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.

இந்த போரில், இரு நாடுகளும் பெரும் இழப்பை சந்தித்து. இதில் ரஷ்யா உக்ரைன் நாட்டில் உள்ள சில முக்கிய பிராந்தியங்களை கைப்பற்றுவதற்கு ஏவுகணை உள்ளிட்ட பல தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களை உக்ரைன் நாடு உலக நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளுடன் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இதற்கிடையே, சில மேற்கத்திய நாடுகள் ரஷியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டிற்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளன.
அந்தவகையில், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்த ஒப்புதலுக்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதையடுத்து, நவீன டாங்கிகள் அனுப்பப்படும் என்று அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அறிவித்த 24 மணி நேரத்திற்குள் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பதினொரு பேர் பலியாகினர் என்றுத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலில் கீவ் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பெரும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்ததாவது:- "ரஷியா நேற்றிரவு உக்ரைன் முழுவதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு, அமெரிக்காவின் சார்பாக கண்டனத்தையும், காயமடைந்த அனைவருக்கும் அனுதாபத்தையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
america condemns for russiya missile attack to ukraine