உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த 270 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தொகுப்பு வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த 270 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தொகுப்பு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

மேலும் உக்ரைனுக்கு ஐரோப்பா, அமெரிக்கா நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா 270 டாலர் மதிப்பிலான ஆயுதங்களின் தொகுப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்தத் தொகுப்பில் உயர்மட்ட பீரங்கி ராக்கெட் அமைப்புகள், நடுத்தர தூர ராக்கெட் அமைப்புகள், பீனிக்ஸ் கோஸ்ட் டிரோன் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் உள்ளதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க அமெரிக்கா உக்ரைனுக்கு 8.2 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america assures to give 270 million worth advanced weapons


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->