சீனாவில் அதிகரிக்கும் வெப்ப அலை பரவல்: பயிர்கள் மற்றும் மக்களுக்கு தொடரும் அச்சுறுத்தல் - Seithipunal
Seithipunal


கடந்த சில வாரங்களாக காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சிகல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சீனா முழுவதும் ஜூன் 13ஆம் தேதியில் இருந்து கடுமையான வெப்ப அலை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 2வது வாரம் வரை நீடித்திருக்கும் என்று குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் வடமேற்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தின் தென்கிழக்கு பகுதிகள், கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதிகளில் 40 டிகிரிக்கும் கூடுதலான வெப்ப அலை பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடரும் வெப்ப அலை பரவலால் பருவ காலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் பாதிக்கப்பட கூடிய ஆபத்து உள்ளது. மேலும் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலும் ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மக்கள் வெப்பத்தில் இருந்து தப்பிக்க மேற்கொள்ளும் வழிகளால் வீடுகளில் மின்சார உபயோகம் அதிகரித்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alerts given to crops and people due to heatwave in china


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->