துப்பாக்கிக்கு பயம் இல்லை..!! தாலிபான்களிடம் கெத்து காட்டிய ஆப்கான் பெண்மணி..!! - Seithipunal
Seithipunal


தாலிபான்கள் ஆப்கானில் 20 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளனர். 20 வருடங்களுக்கு முன் அங்கு ஆட்சியில் இருந்த தாலிபான்கள் ஆட்சி செய்த போது பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இருந்தன. பெண்களை கற்களை கொண்டு தாக்குவது அவர்களை பொது இடத்தில் வைத்து கசையடி தருவது போன்றவற்றை செய்து வந்தனர்.

இந்நிலையில், இந்த 20 ஆண்டுகளில் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் தங்களின் பங்களிப்பை அளிக்க ஆரம்பித்துள்ளனர். அப்படி இருக்க அங்கு மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அமைத்திருப்பது அவர்களின் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருக்கும் என கருத்து எழுந்துள்ளது.

ஆனால் தாலிபான்கள் பெண்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படாது என கூறியிருந்த நிலையில் அங்கு நிலைமை தலைகீழாக உள்ளது. பெண்கள் மீது பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள பெண்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இது தாலிபான்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

இதற்கிடையில்,போராட்டகளத்தில் இருந்த ஒரு பெண்ணை நோக்கி தாலிபான் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். ஆனால் அந்த பெண் அஞ்சாமல் போராட்ட களத்தில் நின்று உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தங்களின் உரிமைக்காக போராடும் ஆப்கான் பெண்களின் மன உறுதியை இந்த படம் பிரதிபலிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghan woman not afraid of guns


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal